சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியடித்தம்பத்தில் கடந்த (29.04.24)ம் தேதி அன்னை அரிசி கடை மற்றும் குமரன் ஜவுளி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.8000/- பணம் திருடப்பட்டது. தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், குற்றவாளியான லட்சுமணன் (49/24, த/பெ. காத்தமுத்து, சித்திரை வடங்கம், அறந்தாங்கி, புதுக்கோட்டை) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் காளையார்கோவில் அருளானந்தர் மஹால் அருகில் உள்ள SDK Auto Spare parts கடையில் கடந்த (23.01.24)ம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதாகவும், தேவகோட்டை நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள அமுதம் ட்ரேடர்ஸ் மற்றும் விக்கி கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் பூட்டை உடைத்து கடந்த (20.02.24)ம் தேதி ரூ.15,000/- பணத்தை திருடியதாகவும், மேலும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய சரகம், கான்பா நகரில் உள்ள Menswear கடையில் கடந்த (27.04.24)ம் தேதி கடையின் பூட்டை உடைத்து ரூ.48,000/-ரூபாய் பணத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரிடமிருந்து மொத்தமாக ரூ.15,500/- பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளியான லட்சுமணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி