சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எழிலரசன் (22). த/பெ.தீனதயாளன், அண்ணாமலை நகர், மானாமதுரை மற்றும் அஜய்பிரகாஷ் (23)/(24). த/பெ.சந்தன பாண்டி, கண்ணார் தெரு, மானாமதுரை ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த், இ.கா.ப., அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள் திரு.ரூபன் மற்றும் திரு.பூபதி தலைமையிலான தனிப்படையினர் மேற்படி குற்றவாளிகளை (25.02.2024)-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் வாள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற கஞ்சா உபயோகிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.