சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிலூர் நெசவாளர் காலனியில் கடந்த 19.04.2021 ம் தேதியன்று மாலை சுமார் 04 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களை ஒரு மர்ம நபர் KTM BIKE ல் பின்தொடர்ந்து ,இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்று விட்டதாக, குன்றக்குடி காவல் நிலையம் வந்து 20.04.21 ம் தேதி புகார் அளித்ததை தொடர்ந்து நிலைய கு.எண்.56/2021 U/s. 392 IPC ஆக வழக்குப் பதிவு செய்த பின்னர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *
திரு* . இராஜராஜன் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும்,
காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.Dr . அருண் அவர்கள் மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி . *செல்வகுமாரி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிய நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றவாளி ஓட்டிவந்த வாகனம் புதிய வண்டி என்பதை அறிந்து காரைக்குடி KTM showroom ல் விசாரித்தபோது கடந்த இரு மாதங்களில் ஒரே வண்டிதான் விற்பனையாகி உள்ளது என்பதை அறிந்து, அந்த வண்டியின் உரிமையாளர் முகவரியை பெற்று அவனை பற்றி விசாரித்தபோது நமக்கு கிடைத்த Footage ல் உள்ள நபர் தான் அவர் என்பதை அறிந்து ,அவனை அவனது வீட்டிலையே வைத்து கலைதாஸ் கைதுசெய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது கலைதாஸ் இந்த குற்றத்தையும் மற்றும் இதற்கு முன் செய்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டான் . பிறகு அவரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சம்பவத்தில் பறித்த இரண்டு சங்கிலிகள்(6+5.1/2) = 11.1/2 பவுன் எடையுள்ள தங்க சங்கிலிகளை கைப்பற்றினோம். பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி கலைதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.