நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதிதாக பொறுப்பேற்ற ஜெயிலர் வசந்த கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஒரு அறையில் மூன்று கைதிகள் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்து, இந்த செல்போன் எப்படி வந்தது?
இது யாருடைய செல்போன், இதில் யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்கள் என்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.