திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிறையில் உதவி சிறை அலுவலர் திரு ரமேஷ் அவர்களிடம், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையர் திரு. தேவநாதன், பிரநவ் உரிமையாளர் திரு. மாணிக்கவேல் ஆகியோர் புத்தகங்களை சிறைவாசிகளுக்காக தானமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் வெற்றிமொழி வெளியிட்டகத்தின் சார்பில் திரு.தாசன் ஆகியோரும் கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், மற்றும் சிறைத் துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தொடர்ந்து பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பால் தாமஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.