திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2-ஆவது கோபுரம் பிளாக்கில் வாா்டனாக பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது, மதுரையை சோ்ந்த தண்டனை கைதி மீனாட்சி சுந்தரம், சக கைதியான ராஜேஷ் என்பவரை அடித்து, உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவா்களை மகேந்திரன் சமாதானப்படுத்த முயன்றாராம். அவரையும் மீனாட்சி சுந்தரம் தாக்கினாராம். இதில் காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பெருமாள்புரம் காவல் ஆய்வாளர், ஹரிஹரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்