குமரி: குமரி மாவட்டம் கோட்டார் கணேசபுரத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் காவலர்கள் முழுநேர பணியாற்றி வருவதால் ,போலீசாரின் குடும்பத்தினர் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கணேசபுரம் காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை இன்று மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார்.