திருநெல்வேலி: திருநெல்வேலி குறிச்சிகுளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாயாண்டி (26) என்பவர் கடந்த 2019 -ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த (10). வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் தாழையூத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் மாயாண்டிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் (10). ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தாழையூத்து காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்