புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் அண்ணன் மகனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் அந்த நபர்கள் தன்னை சைபர் கிரைம் போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டு, அந்த சிறுவனிடம் நீ ஆபாச வீடியோ பார்த்து இருக்கிறாய் என்றும்,
அது சட்ட விரோத செயல் என்றும், அதற்காக ரூபாய் 20,000/- அபராத பணம் அனுப்ப வேண்டும் என்றும் தொலைபேசியில் மிரட்டி உள்ளனர். மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுவன் 20,000/- ரூபாயை GPAY மூலம் பணம் பரிமாற்றம் செய்து உள்ளார்.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுவனின் சித்தப்பா 03.08.2021-ம் தேதி கொடுத்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் சைபர் கிரைம் போலிஸார் கிருஷ்ணகிரி சென்று குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் பணம் ரூ.20,000/- ஆகியவற்றை கைப்பற்றியும்.
குற்றவாளிகளை கைது செய்து 05.08.2021-ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி திருமயம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை நவீன தொழிற்நுட்ப உதவியுடன் துரிதமுறையில் கண்டறிந்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் அவர்களது தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.