திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, காரை துரத்திச் சென்று சோதனையிட்டதில் காரை ஓட்டி வந்தது (17). வயது பள்ளி மாணவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவரின் தந்தையே காரை இயக்க ஊக்கப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(46). என்பவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















