தேனி : போடி தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் சுஜித்விசாகன் என்பவர் தான் அணிந்து வந்த 2 பவுன் தங்க செயினை தவறவிட்டதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் கோபி கிருஷ்ணன் என்பவர் கீழே கிடந்த தங்க செயினை எடுத்து பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு.S.ரமேஷ்குமார் அவர்கள் தலைமையில் செயின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் அவர்கள் சிறுவனின் நேர்மையை பாராட்டி பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.