தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள் நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய மொத்தம் 25 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
விளாத்திகுளம், எப்போதும்வென்றான், சங்கரலிங்கபுரம், புதூர், தூத்துக்குடி வடபாகம், முறப்பநாடு, கோவில்பட்டி மேற்கு, தருவைக்குளம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் பணியாளர்கள் இந்த பாராட்டைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சி காவல்துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் மேலும் உறுதியுடன் செயல்பட தூண்டுதலாக அமைந்தது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















