திண்டுக்கல் : திண்டுக்கல் ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை ரோந்து போலீசார் விசாரித்த போது சிறுமி வீட்டில் இருந்து வழி தவறி வந்து விட்டதாக தெரிவித்தது. இதனையடுத்து ரோந்து போலீசார் சிறுமியை காவல் நிலையம் அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தி பின்னர் சிறுமியிடம் விசாரித்து பிச்சாண்டி மஹால் எதிரே உள்ள ரோமன் சர்ச் பகுதியை சேர்ந்தவர் என அறிந்து பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து நல்ல முறையில் சிறுமியை ஒப்படைத்து பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா