திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடமதுரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சிறுமி கடத்தியதாக முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் தாமரைபாடியை அடுத்த டி.என்.பாறைப்பட்டியை சேர்ந்த பிரபு, சீலமுத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ராஜா (எ) ராஜ்குமார்(25). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















