தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அண்ண சாகரம் வெங்கடாசலபகுதியை சேர்ந்தவர் செந்தில் மகன் நரேஷ்குமார்(19), இவர்க்கும் போடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டது.
சிறுமியை ஆசைவாரத்தை கூறி நரேஷ்குமார், கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது அதன்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் டூவீலர் வாகன சோதனையில், போலீஸார் பிடித்தனர். போடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, நரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.