திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் அழகு பாண்டியன்(43). மற்றும் அவரது மனைவி கலாமணி(39). இடையகோட்டை புலியூரை சேர்ந்த சரவணன் மனைவி காந்தாமணி(41). ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















