கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று ஜன.24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பரப்பினார். இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் ஜன.27ஆம் தேதி சாமல்பட்டி காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து சிறுமியை கடத்திச் சென்ற பூவரசன், அவரது தாய் ஆனந்தி, பெரியப்பா ராஜா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்