சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் நிஷாந்தினி என்ற சிறுமி அவரது தந்தை இராம்குமாருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற போது ராம் நகர் அருகே பணப்பை கிடப்பதை பார்த்து தந்தையிடம் சொல்லி தந்தையும் மகளும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் அந்த பையில் இருந்த வங்கி புத்தகத்தின் மூலம் பணத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அதே வேலையில் அவரும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வந்ததால் உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிறுமியை தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கௌதம், அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தியதுடன் சிறுமி படிக்கும் பள்ளியின் தலைமையசிரியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்