திண்டுக்கல் : திண்டுக்கல் , சிறுமலை வனச்சரகத்திற்குட்பட்ட தவசிமடை கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ( அருவி பள்ளம் என்னும் இடம் ) சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு D.S.P, நாகராஜ், தலைமையிலான போலீசார் அவ்விடத்தை சோதனை நடத்தி சாராய ஊரல் மற்றும் அதற்கான தளவாட பொருட்களை அழித்தனர். மேலும் 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து வேளாங்கண்ணி (43) என்பவரை கைது செய்து அவரிடம் இந்த குற்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என திண்டுக்கல் மதுவிலக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.