தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைப்பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதாக வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.
ஆனால் மலை மீது உள்ள கைலாசநாதர் சுவாமியை காண பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள்வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் பௌர்ணமி நாட்களில் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுள்ள மலையை பொதுமக்கள் கிரிவலம் வருவர்.ஆனால் கைலாசநாதர் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரை அடுத்து பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவித்து, கைலாசநாதர் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது