தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் ஆய்வாளர் திரு. ராஜேந்திரன் (52). அவர்கள், (15.12.2024) மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அன்னாரது உடலுக்கு இன்று (16.12.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.