கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு.சாமிநாதன் அவர்கள் (23.02 2025) ஆம் தேதி காவல் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஒய்வு பெற்ற திரு.சாமிநாதன் அவர்களுக்கு சிப்காட் காவல் துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதவி கண்காணிப்பாளர் மற்றும் சிப்காட் காவல் ஆய்வாளர் மற்றும் ஓசூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர்கள் கலந்து கொண்டனர். காவல் துறை குடும்ப உறவுகள் அனைவரையும் ஒன்றிணைத்து பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்