திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானவேல்., (15.05.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சீவலப்பேரி பஜாரில் உள்ள ஒரு கடை அருகே சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த வளையலை உரியவரிடம் சேர்க்க நினைத்து சீவலப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த வளையல் மேலபூவாணி, வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராஜாராம் என்பவருடையது என்று உறுதி செய்து அவரிடம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஞானவேல் ஒப்படைத்தார். இவரது நேர்மையை அறிந்த திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஞானவேலை பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
