நாகப்பட்டினம் : மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினர் கடலில் மிதந்து வந்த வெடிபொருளை கண்டறிந்து எந்த ஒரு தீங்கும் நடைபெறாமல் பாதுகாப்பு இடத்திற்கு அனுப்பி வைத்தனர், சிறப்புடன் செயல்பட்ட மோப்பநாய் படைப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு கடந்த (12.02.2024) தேதி காலை சுமார் 06.30 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டர் பூம்புகார் கடற்கரை காவல் நிலைய சரகம், நாயக்கர்குப்பம் மீனவ கிராம கடற்கரையில் வெள்ளை நிறத்தில், அடிப்பகுதி கருப்பு நிறத்தில் சிலிண்டர் வடிவத்தில் சுமார் 43 செ.மீ நீளமும், 32 செ.மீ சுற்றளவும் கொண்ட சந்தேகம் படக்கூடிய ஒரு பொருள் கரை ஒதுங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம (BDDS) வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படைபிரிவு ஆய்வினை மேற்கொண்டது பின்பு அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட துப்பறியும் வெடிகுண்டு மோப்பநாய் பிரிவு குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேற்படி ஆய்வில் சிலிண்டரில் இருப்பது வெடிபொருள் தான் என்று துப்பறியும் மோப்ப நாய் அக்கீரா உதவியுடன் கண்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்சமயம் பாதுகாப்பிற்காக வெடி பொருளை சுற்றி மணல் முட்டைகள் அடுக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்வழக்கில் சிறப்புடன் செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினரை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா. ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.