தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் நிலைய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கட்ட ராஜா என்கிற சரவணன் என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்றும் ஆறுமுகம், செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் Rs.12,000/- அபராதமும் விதித்து கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த ஆய்வாளர்கள் திரு.ராமமூர்த்தி, திரு.முருகவேல் (தற்போது துணை காவல் கண்காணிப்பாளர்) அவர்களையும் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு உறுதுணையாக இருந்த ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.