தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 52 பேர் சிறப்பான முறையில் பணியாற்றி 25 வருடங்கள் நிறைவு செய்வதை முன்னிட்டு (19.10.2022), வெள்ளிவிழா நிகழ்ச்சி தூத்துக்குடி டி.எஸ்.எப் அரங்கில் டைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், காவல்துறையில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள எந்த இடத்தில் பணியாற்றினாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நமக்கு மன நிம்மதியை தருவது பதவியோ, பணமோ இல்லை நம் குடும்பத்திற்கு உண்மையாக இருந்தால் அதுவே நமக்கு நிம்மதியை கொடுக்கும். நம்மை நம்பி வரும் பொதுமக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். நீங்கள் இதே போன்று நல்ல உடல் நலத்துடன் மற்றும் மனநலத்துடனும் காவல்துறையில் மென்மேலும் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும். என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், பெண் தலைமை காவலர்கள் திருமதி. ஐலீன், திருமதி. உமா, திருமதி. பாமா, தலைமை காவலர் திரு. செந்தட்டி, ஆகியோர் செய்திருந்தனர். இதில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறையினர் கலந்து கொண்டனர்.