தூத்துக்குடி: கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தங்க நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவரை மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து கிடைக்கப்பெற்ற வான்செய்தி தகவலின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றிய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மர், உதவி ஆய்வாளர்கள் திரு. கண்ணன், திரு. வெள்ளத்துரை, முதல் நிலை காவலர் திரு. பரமசிவன், காவலர்கள் திரு. ஆரோக்கியராஜ் மற்றும் திரு. மாரிச்செல்வம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
♻️ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தும்,
நன்னடத்தை பிணை பத்திரம் பெற்ற குற்றவாளி பிணை பத்திரத்தை மீறி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் கொலை முயற்சியில் ஈடுபட்ட மேற்படி குற்றவாளிக்கு 6 மாத சிறை தண்டணை பெற்றுக்கொடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜூடி மற்றும் முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதூர் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது சென்னையில் வைத்து காணாமால் போனதால் வந்த புகாரின் அடிப்படையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்த புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. விநாயகம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சத்தியசீலன் மற்றும் தலைமை காவலர் திரு. கவுஸ் முகைதீன்கான் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட காரை கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு சுங்கசாவடி பகுதியில் வாகன தணிக்கையின் போது கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பால் காவல்கள் திரு. கணேஷ்குமார் மற்றும் திரு. திருப்பதிகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டுவழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேரை கைவிரல் ரேகை மூலம் அடையாளம் கண்டு வழக்கின் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி ஒருவிரல் ரேகை பதிவுகூட உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ்வரி மற்றும் தலைமை காவலர் திரு. திருமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு குற்றவாளி மற்றும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு குற்றவாளி ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மோகன்ராஜ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட முயற்சி செய்து தப்பி சென்றவரை இருசக்கர வாகன ரோந்து பணயிலிருந்து துரத்தி சென்று மடக்கி பிடித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவலர் திரு. சந்திரசேகரன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.