தூத்துக்குடி: திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் பின்புறம் தண்டவாளம் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து.
மேற்படி கஞ்சா மற்றும் இரண்டு கார்களையும் கைப்பற்றி குற்றவாளிகளான கேரளாவைச் சேர்ந்த அஸ்வின், ஆசிர், ஷம்னாஸ் மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய் கணேஷ் ஆகிய 4 நபர்களை கைது செய்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞானசேகரன்,
உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கனகராஜ், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாரியப்பசாமி, முதல் நிலை காவலர் திரு. சொர்ணராஜ், காவலர்கள் திரு. சதானந்தம் மற்றும் திரு. பாண்டிதுரை ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் 12 மணி நேரத்தில்குற்றவாளிகளை கைது செய்து 10 பவுன் நகைகளை மீட்ட புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ், உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன், தலைமை காவலர் திரு. சிவசக்திவேல், முதல்நிலைக் காவலர் திரு. கிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சங்கரலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் காணாமல் போன வழக்கில் நாகலாபுரத்தை சேர்ந்த முத்துபிரியா என்பவரை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் பகுதியில் கண்டுபிடித்து நிலையம் கொண்டு வந்த மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கோகிலா, சங்கரலிங்கபுரம் உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம், காவலர் திரு. ஜெகன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 21.07.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கண்டுபிடித்து.
வழக்கின் சொத்துக்களான ரூபாய் 66,000/- மதிப்பிலான 6 செல்போன்களை கைப்பற்றி எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, தலைமை காவலர்கள் திரு. ஞானகுரு, திரு. ஆறுமுகநயினார், முதல் நிலை காவலர் திரு. தாமஸ் சேவியர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு குடோனில் 5610 லிட்டர் மண்ணெண்ணெய்யை கைப்பற்றி உணவு பாதுகாப்புதுறையிடம் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், முதல் நிலை காவலர் திரு. செல்வகுமார், தனிப்பிரிவு காவலர் திரு. அருண் விக்னேஷ், காவலர் திரு. கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி
மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
♻️இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. கிறிஸ்டி ஆகியோர் உடனிருந்தனர்.