தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து மற்றும் காவலர் திரு. சத்ரியன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 22.10.2021 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதயில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,50,000/– மதிப்புள்ள செம்பு மற்றும் பித்தளை பொருட்களை பறிமுதல் செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், தலைமை காவலர் திரு. சுதாகர் பால்சிங், திரு. ஆண்டி மற்றும் முதல் நிலை காவலர் b ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
எட்டையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முறப்பநாடு காவல் நிலைய கொலை மிரட்டல், திருட்டு உட்பட 3 வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2018ம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு. சரவணகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 22.10.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 56. 784 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய். 260/- பணமும் பறிமுதல் செய்து 3 குற்றவாளிகளை கைது செய்தும்,
அதேபோன்று அன்றே விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20.808 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய். 300/- பணமும் பறிமுதல் செய்து 3 குற்றவாளிகளை கைது செய்தும்,
இதுதவிர கடந்த 23.10.2021 அன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 45.200 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குற்றவாளியை கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காசிலிங்கம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பால்ராஜ், விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருநெல்வேலி to தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு பேரூந்து நிறுத்தம் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதை அறிந்து பொதுமக்கள் நலன் கருதி தாங்களாகவே அருகில் இருந்த மண்ணை எடுத்து பள்ளத்தில் கொட்டி சாலையை சீரமைத்து கொடுத்த முறப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் திரு. சேகர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 19.10.2021 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனை செய்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுமார் 1260 கிலோ விரலி மஞ்சளை பறிமுதல் செய்து குற்றவாளிகள் 2 பேரை கைது செய்த விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சேகர் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 விபத்து வழக்குகள், 3 புகையிலை பொருட்கள் வழக்குகள் உட்பட 14 வழக்குகளை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தண்டனையில் முடித்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. ஜெயலெட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
அக்டோபர் மாதத்தில் மிகச்சிறந்த முறையில் ரகசிய தகவல்கள் சேகரித்த மாவட்ட தனிப்பிரிவு தலைமை காவலர்கள் திரு. ஜோஸ் ஜூடு லியோ, திரு.சுரேஷ்குமார் மற்றும் திரு. துரைபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
அக்டோபர் மாதத்தில் மட்டும் 16 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்ட மத்தியபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. சாமிநாத் மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. சுந்தரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
2 காவல் ஆய்வாளர் உட்பட 25 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து அவர்கள் உடனிருந்தார்.