மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு வழக்குகள் மாநில அளவில் அறிவியல் தொழில்நுட்ப முறை உதவியோடு குற்றப் புலனாய்வு செய்யப்பட்ட வழக்குகளில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கனம் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களால் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஒத்தக்கடை காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத சுமார் (78). வயது மதிக்கத்தக்க மூதாட்டி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண். 309/2023 பிரிவு 302 இ.த.ச @ 364,376,302 இ.த.ச வழக்கு பதிவு செய்து அறிவியல் தொழில்நுட்ப முறை உதவியோடு குற்றம் நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளி கண்டறியப்பட்டதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்ப முறையில் குற்றப் புலனாய்வு செய்யப்பட்ட சிறந்த வழக்கு என்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று மேற்படி வழக்கின் புலனாய்வு அதிகாரி திரு. செந்தாமரைக்கண்ணன், காவல் ஆய்வாளர் என்பவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய்.10 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில் ஒரு கோவில் பாதுகாப்பாளர் (watchman) மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் கீழ்காணும் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண்.671/2015 பிரிவு 449, 394 இ.த.ச மற்றும் 397, 302 இ.த.ச வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு சுமார் 8 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் அறிவியல் தொழில்நுட்ப முறையில் சமீபத்தில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநில அளவில் சிறந்த குற்றப்புலனாய்விற்கான வழக்குகளில் ஒரு வழக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரசேகர் என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கனம் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களால் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்