திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கஞ்சா வேட்டை 3.0- வினை செயல்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டுளளார். உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில் உட்கோட்டத்தில் உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்யும் எதிரிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர்சிங், இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் சிறப்பாக செயல்பாட்டின் மூலம் கடந்த (15.12.2022)-ம் தேதி ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனத்தில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மற்றும் குற்றவாளிகளை பிடித்தனர். இதுவே மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட அதிகப்படியான கஞ்சாவாகும்.மேலும் அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த 18.12.2022-ம் தேதி காரின் டயருக்குள் மறைத்து வந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேற்படி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர் சிங் இகா.ப., தலைமையில் சிறப்பாக பணிபுரிந்த, காவல் ஆய்வாளர்கள் திரு.சந்திரமோகன், திரு.பெருமாள், உதவி ஆய்வாளர்கள் திரு.முருகேஷ், திரு.வாசுதேவன், திரு.இளையராஜா (பயிற்சி) சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார், தலைமை காவலர்கள் திரு.முரளி, திரு.ஆறுமுகம், முதல்நிலைக் காவலர்கள் திரு.ராஜேஷ், திரு.கார்த்திக் பாபு, திரு.இசக்கி ராஜா, திரு.இசக்கி பாண்டி, திரு.மகாராஜன், திரு.திவான் ஷா ஷேக் பரீத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் திரு.முகமதுபஷீர், ஆகிய உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி ஊக்குவித்தார். மேலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.