திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில், பணிபுரியும் காவல் துறையினரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. இதில் தமிழக டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. சங்கர்,திரு. மணிகண்டன் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார், மற்றும்காவலரான திரு.ரமேஷ், திரு. பாலமுருகன், திரு. இளவரசன், திருமதி . ஜெயலட்சுமி, திரு. கார்த்திகேயன், ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதியை வழங்கினார். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. திரு. சந்தோஷ்குமார், திருச்சி சரக டி.ஐ.ஜி. திரு. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.