இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.