கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் நல்ல முறையில் இயங்குகிறதா என மாதாந்திர ஆய்வினை மேற்கொண்டார்கள். மேலும் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. போலீசார் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களை மேப்பிங் செய்து கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நவம்பர் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக திருவட்டார் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேடயம் வழங்கினார்.
அதனை தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் மற்றும் திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மதன் ராம்குமார், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
















