சென்னை: நாடெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தினத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.சியாமளா தேவி அவர்களது சிறப்பான பணியினை பாராட்டி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பாக 09.02.2023-ம் தேதி சென்னையில் முதன்மை செயலாளர் முனைவர். திரு.அதுல் ஆனந்த், இ.ஆ.ப., அவர்கள் விருது வழங்கினார். இத்தகைய விருதைப் பெற்றமைக்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்கள்.