தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்ற பின்னணி உள்ள 3 போக்கிரிகள் மற்றும் ஒரு எதிரியை கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சங்கர் என்பவரை கொலை செய்ய முயன்ற எதிரிகள் மூவரை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் திரு. முத்து கணேஷ், திரு. சிவக்குமார், தலைமை காவலர் திரு. பென்சிங், காவலர்கள் திரு. செந்தில், திரு. திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 15.06.2021 அன்று குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து எதிரியை கைது செய்து, வாகனத்தையும் கைப்பற்றிய குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் திரு. ராஜன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கயத்தாறு ஆற்றங்கரை சுடலை கோவில் அருகில் வைத்து மூன்று எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான 1½ கிலோ கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தும், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்க நகை, மற்றும் பணம் ரூபாய் 60,600/-யை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் திரு. அரிகண்ணன், திரு. பால், தலைமை காவலர் திரு. செல்வம், காவலர்கள் திரு. சத்ரியன், திரு. பால கிருஷ்ணன், திரு. ஆனந்த், திரு. கோபால கண்ணன் திரு. குருமூர்த்தி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 19.06.2021 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று எதிரிகளை கைது செய்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இம்மானுவேல் ஜெயசேகர், தட்டாபாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. விக்னேஷ், முதல்நிலைக் காவலர் திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தட்டப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளம்சிறார்கள் இருவரை கைது செய்தும், களவுபோன மோட்டார், வயர் மற்றும் பைப் ஆகிய சொத்துக்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்த தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் அவர்களின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 20.06.2021 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடல்மார்க்கமாக கடத்தவிருந்த சுமார் 2450 கிலோ எடையுள்ள மஞ்சள் மூடைகள், லாரி, இருசக்கர வாகனங்கள் மற்றும் படகின் இன்ஜின் ஆகியவற்றை கைப்பற்றிய ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. அமலோற்பவம், தலைமை காவலர்கள் திரு. வெள்ளாரி புருஷோ சேவியர், திரு. ராஜா, திரு. ரகு, முதல் நிலை காவலர் திரு. லட்சுமண பெருமாள், திரு. பாலமுருகன், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 அணி காவலர் திரு. ராஜ விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆடுகள் திருடிய எதிரிகள் மூவரை கைது செய்தும், அவர்கள் திருடிச் சென்ற 8 ஆடுகளை கைப்பற்றி சாயர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருள் சாம்ராஜ், முதல் நிலை காவலர் திரு. சீனிவாசன், காவலர் திரு. கணேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 15.06.2021 அன்று கோவில்பட்டி மூக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மதுபான கூடத்திலிருந்து 270 மது பாட்டில்களை கைப்பற்றி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, தலைமை காவலர் திரு. அர்ஜுன்ராஜ், முதல் நிலை காவலர் திரு. முருகன், தனிப்பிரிவு காவலர் திரு. அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.