திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் கடந்த ஆண்டு தென் மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில அளவில் சிறந்த காவல் நிலைய தேர்வுக்கான ஆய்வை வெல்பர் ஐ.ஜி. திரு.சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உதவி கண்காணிப்பாளர் திரு.அருண் கபிலன்,தாலுகா காவல் நிலைய பாலாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா