தேனி: தேனி மாவட்டத்தில், இ. ஆன்லைன் பதிவு முறை அமலாகிவிட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் சுற்றித் திரிவதாக தொடர்ந்து, தேனி மாவட்ட எஸ்.பி.க்கு புகார்கள் சென்றன.
இதில் இ. ஆன்லைன் பெறாத வாகனங்கள் இதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம், செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை முதல் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வரும் இந்நிலையில்,சின்னமனூர் கண்ணம்மாள் கார்டன் முன் போலீஸார் தீவிர சோதனை, ஊரடங்கு உத்தரவை மீறி , மற்றும் முறையான ஆவணங்களின்றி பயணம் செய்வோரிடம் தீவிர சோதனை செய்து , இ பாஸ் இன்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது, மேலும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.