திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானலில் வனத்துறை சார்பில் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏரிச்சா லையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழக மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் சக்திவேல் உரையாற்றினார். சிட்டு குருவிகள் டெல்லியின் மாநில பறவையாக இருப்பதாகவும், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது என்றும், 30 கிராம் எடை மற்றும் 17 சென்டி மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை இந்த சிட்டு குருவிகள் ஆகும்.
சிட்டு குருவிகள் வாழ்விடம் குறைந்துள்ளதால் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார். மேலும் விவசாய நிலங்களில் அதிகமான ரசாயனம் கலந்த உரங்கள் பயன்படுத்துவதனாலும், செல் போன் அலைக்கற்றையின் கதிர் வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்றார். இதனையடுத்து ஏரிச்சாலை யில் இருந்து பேரணி தொடங்கி நகராட்சி காந்தி பூங்காவில் நிறைவு பெற்றது. இதில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என மாணவிகள் பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர். கோடைகாலத்தை முன்னிட்டு குருவிகளுக்கு வீட்டின் மாடி பகுதியில் தண்ணீர் மற்றும் இரை, தானியங்கள் வைக்க மண் பானைகளும் வனத்துறை சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.