சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம் கல்லல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சம்மை டிரஸ்ட் சார்பில் கல்லல் ஒன்றிய பகுதியின் பாதுகாப்புக்காக காவல்துறைக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 52 ஆன்லைன் அதிநவீன சிசிடி கேமராக்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது பிச்சம்மை டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை இ.கா.ப அதிநவீன கேமரா அறையை திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப தேவகோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் த.நா.ப கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் தேவகோட்டை உட்கோட்ட தனி பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியப்பன், கல்லல் காவல் நிலைய தனி பிரிவு தலைமை நிலை காவலர் அழகு, திருவேகமுத்தூர் காவல் நிலைய தனி பிரிவு தலைமை நிலைக் காவலர் சாமிநாதன் மற்றும் ஏனைய காவல் ஆளிநர்கள் மற்றும் பிச்சம்மை டிரஸ்ட் தலைவர், செயலாளர், பொருளாளர், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி