திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிசிடிவி கேமரா பொருத்துவதால் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், எளிதில் குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கவும், அந்நிய நபர்கள் நடமாட்டங்களை கண்காணிக்கவும் பயன்படுகிறது எனவும், எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சாலை பாதுகாப்பு அவசியம் குறித்தும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா