சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் நன்கொடையாளருக்கு பாராட்டு விழா நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலையில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. துணை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் பாதுகாப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி