திண்டுக்கல் : அதிகாலையில் பழனியில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் குதிரைகள் அடிபட்டு விபத்து ஏற்பட்டது. அடிபட்ட குதிரைகளில் ஒரு குதிரை சம்பவ இடத்திலே இறந்து விட்டது. மற்றொரு குதிரை உயிருக்கு போராடி வந்த நிலையில் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பழனி கோட்டம் கால்நடை உதவி மருத்துவர் ச.செந்தில்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குதிரைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா