மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி சம்பவ இடத்தில் பலி சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் மணி
ஓய்வு பெற்ற அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் இவர் அதிமுகவின் வாடிப்பட்டி ஒன்றிய இலக்கிய அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் வாடிப்பட்டியில் இருந்து தனது இருசக்கர மொபட் வாகனத்தில் சோழவந்தானில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் எதிரில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர் மணியின் உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். சோழவந்தானில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் வாகன விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுகவினர் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி