கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி மேலாளர்கள், பஸ், வேன் டிரைவர்களுக்கு சாலை விதிமுறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர் பேசும் போது சாலை விதிகளை பின்பற்றுவதில் தனியார் பள்ளி பஸ் டிரைவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றும் போதும் அழைத்து வரும்போதும் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி மாணவர்களை இறக்கிவிட பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சிக்னல்களை முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். வளைவில் திரும்புவது, முன்னால் செல்லும் வாகனங்களை முந்த முயல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்