திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் திருநெல்வேலி, சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சாலைவிபத்து அதிகமாக ஏற்படும் பகுதியாக இராமையன்பட்டி அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி கோயில், சிவாஜிநகர், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி,சேதுராயன்புதூர் விலக்கு, நரியூத்து, அழகிய பாண்டியாபுரம், செட்டிகுறிச்சி, மானூர் பஜார், சுப்பையாபுரம், பிள்ளைகுளம் விலக்கு, ரஸ்தா விலக்கு, மேலபிள்ளையார்குளம், கழுகுமலை பிரிவு ரோடு, கயத்தாறு பிரிவு ரோடு, வன்னிகோனந்தல், வன்னிகோனந்தல் இசக்கியம்மன் கோவில், ஆகிய இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் வண்ணம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஏற்பாட்டில் ஒளிரும் விளக்குகள் அப்பகுதிகளில் 24 இடங்களில் அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா இன்று திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவமனை கல்லூரி முன்பு நடைபெற்றது. அப்போது *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள்* ஒளிரும் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
அதில் குறிப்பாக முக்கிய சாலை சந்திக்கும் இடங்களில் அதிக அளவில் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே மேற்படி முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை அமைக்கும் போது அதை கவனிக்கும் வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை பயன்படுத்துவதன் மூலமும், வேகத்தை குறைப்பதன் மூலமும், தவறும் பட்சத்தில் பிரேக்கை பயன்படுத்தி விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் என கூறினார்.
மேலும் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்வார் மது அருந்தி பயணம் செய்ய வேண்டாம் எனவும் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று எடுத்துரைத்தும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், மானூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.ராமர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.