கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து காவல்துறை சார்பாக இன்று சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதில் ஓசூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு .W. அக்ஷய் அனில் வாக்கர் IPS நகர காவல் ஆய்வாளர் திரு.நாகராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி சத்யா , கிருஷ்ணகிரி தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் தலைவர் திரு முத்துசாமி மற்றும் காவல் துறையினர்கள், போக்குவரத்து காவல் துறையினர்கள் இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் துண்டு பிரச்சாரத்துடன் விழிப்புணர்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து வராத நபர்களுக்கு காவல்துறை சார்பாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்