திருநெல்வேலி: திருநெல்வேலி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் சிட்டிசன் கன்ஸ்யூமர். அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் இணைந்து சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக நினைவு தினம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி (08.11.2024).அன்று நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆா்.வி. ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர். சந்திரசேகரன், ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா ஆகியோா் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர், ரகுபதிராஜா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்