திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிதல், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி (09.01.2026) அன்று நடைபெற்றது. சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காவல் ஆய்வாளர்கள் தர்மராஜ் (சேரன்மகாதேவி), ஜோதிலெட்சுமி (பத்தமடை) ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெ.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 100க்கும் மேற்பட்ட ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














