திருவள்ளூர்: விபத்தில்லாத சாலை போக்குவரத்து பயணங்களாக மாற்றும் நடவடிக்கையாக
இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டனர். ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு